ஃபேஸ்புக்கில் இனி வீடியோக்களுக்கே முதன்மை முன்னுரிமை: மெட்டா நிறுவனம் முடிவு!

இளைஞர்கள் மத்தியில் 'ரீல்ஸ்' போன்ற குறுகிய வடிவ வீடியோக்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து, ஃபேஸ்புக் செயலியில் வீடியோக்களுக்கு முன்னுரிமை அளிக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக செயலியின் முகப்பு பக்கம் மாற்றப்பட்டு, வீடியோக்கள் மட்டுமே முதலில் தோன்றும் வகையில் மாற்றம் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு கொண்டுவரப்படவுள்ளது. இருப்பினும், பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பழைய வழக்கமான நியூஸ் ஃபீடு முறைக்கே மாற்றி கொள்ளும் வசதியும் வழங்கப்படவுள்ளது.




கருத்துகள் (0)