வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் விமானங்களுக்கு இணையான உணவு அறிமுகம்!

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் பயணிகளுக்கு விமானங்களில் வழங்கப்படும் உணவுக்கு இணையான தரத்தில் புதிய உணவு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு சுவையான, தரமான உணவை வழங்குவதுடன், உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மும்பை - பெங்களூரு, ஹவுரா - காமாக்யா, டெல்லி - வாரணாசி ஆகிய 3 வழித்தடங்களில் இயங்கும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் இந்த புதிய உணவு வழங்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி, காலை உணவுக்கு சட்னி மற்றும் சாம்பாருடன் இட்லி, வடை, அவல் அல்லது உப்புமா ஆகியவற்றில் ஏதேனும் ஒரு உணவு வழங்கப்படும். மதிய உணவு மற்றும் இரவு உணவில் சப்பாத்தி, சாதம், பருப்பு உள்ளிட்டவற்றுடன் சிக்கன் அல்லது சைவ உணவு வகைகள் பயணிகளுக்கு வழங்கப்படும்.
பயணிகளின் உணவு அனுபவத்தை மேம்படுத்தவும், உணவு தயாரிப்பு மற்றும் வழங்கலில் கூடுதல் தரக்கட்டுப்பாடுகளைப் பின்பற்றவும் இந்த புதிய ஏற்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)