வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
இந்தியா

முன்னாள் காதலரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 3 குழந்தைகளின் தாய்.. சூரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

முன்னாள் காதலரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 3 குழந்தைகளின் தாய்.. சூரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

குஜராத் மாநிலம் சூரத்தில், 3 குழந்தைகளின் தாயான 38 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக அவரது முன்னாள் காதலரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்தப் பெண், 8 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் ஏற்பட்ட விபத்தில் தனது கணவரை இழந்துள்ளார். இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக குழந்தைகளுடன் சூரத்தில் வசித்து வந்த அவர், அங்குள்ள வைர நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அதே மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான பப்லு ராஜ்பர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்தப் பெண் பப்லுவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில், நவம்பர் 22-ம் தேதி மாலை சந்திக்க வேண்டும் எனக் கூறி, இச்சாபூர் கால்வாய் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவரை பப்லு அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அங்கு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவர் தப்பியதாக கூறப்படுகிறது.

 

வீடு திரும்பாத பெண்ணை உறவினர்கள் தேடி வந்த நிலையில், நவம்பர் 24-ம் தேதி கால்வாய் அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலில் காணப்பட்ட காயங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சம்பவ இடத்தில் கிடைத்த காலணியை வைத்து, உயிரிழந்த பெண்ணின் மகன் சந்தேக நபரை அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பப்லு ராஜ்பரை கைது செய்ய இச்சாபூர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.