வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
இந்தியா

காதல் திருமணத்துக்கு பழிவாங்கும் கொலை.. வீட்டுக்குள் புகுந்து இளைஞரை சுட்டுக் கொன்ற கும்பல்!

காதல் திருமணத்துக்கு பழிவாங்கும் கொலை.. வீட்டுக்குள் புகுந்து இளைஞரை சுட்டுக் கொன்ற கும்பல்!

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில், காதல் திருமண விவகாரத்தில் ஏற்பட்ட குடும்பப் பகையை தொடர்ந்து, இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.

 

சரண் மாவட்டத்தின் நைனி கிராமத்தைச் சேர்ந்த அலோக் குமார் சிங் என்பவர் புதன்கிழமை வீட்டில் இருந்தபோது, நான்கு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதில் குண்டு காயமடைந்த அலோக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த தாக்குதலில் அவரது தந்தை ஜிதேந்திர குமார் சிங்கும் பலத்த காயமடைந்தார். அவர் மீட்கப்பட்டு சப்ரா சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

 

அலோக்கின் தம்பி அபிஷேக் குமார், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சினையால் கிராமத்தை விட்டு வெளியேறிய அலோக்கின் குடும்பத்தினர், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மீண்டும் ஊருக்கு வந்திருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நான்கு பேரையும் அடையாளம் கண்டு கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.