இன்ஸ்டாகிராமில் அரசியல் பதிவுகள் நீக்கம்? மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்!

இன்ஸ்டாகிராமில் அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படுவதாகக் கூறி, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் ஆளும் தவெக அரசை விமர்சிக்கும் சமூக வலைதளக் கணக்குகள் மற்றும் பதிவுகள் தொடர்ந்து நீக்கப்படுவதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அரசியல் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுகிறதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
மேலும், இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பின்னால் அரசு அதிகாரமும் காவல்துறையும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் இருப்பதாகக் கனிமொழி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து இன்ஸ்டாகிராம் தளத்தை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றும், பதிவுகள் நீக்கப்படுவதற்கான காரணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




கருத்துகள் (0)