செவ்வாய், நவம்பர் 03, 2026
உண்மையின் குரல்
சினிமா

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – அகிலா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! குவியும் வாழ்த்துகள்!

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – அகிலா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! குவியும் வாழ்த்துகள்!

‘டூரிஸ்ட் ஃபேமலி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தொடர்ந்து ‘வித் லவ்’ படத்தில் கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இந்நிலையில், அவருக்கும் அவரது மனைவி அகிலாவிற்கும் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அபிஷன் ஜீவிந்த் குடும்பத்தில் புதிய மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தங்களுக்கு பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை அபிஷன் ஜீவிந்த் சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, 'அதிகாரப்பூர்வமாகப் பெண் குழந்தையின் அப்பாவாகிவிட்டேன்' என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பதிவைத் தொடர்ந்து திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் புதிதாகப் பெற்றோராகியுள்ள அபிஷன் ஜீவிந்த் – அகிலா தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.