37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் கரகாட்டக்காரன்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

ராமராஜன் நடிப்பில், இளையராஜா இசையமைப்பில் உருவான 'கரகாட்டக்காரன்' திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. கடந்த 1989-ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இப்படம், அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.
திரைப்படம் வெளியாகி 37 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சினிமாஸ்கோப் திரை வடிவம் மற்றும் டிடிஎஸ் ஒலி அமைப்புடன் இப்படம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)