‘ஜெய் அனுமன்’ படத்தில் இணைந்த மமிதா பைஜு! தெலுங்கில் புதிய அறிமுகம்!

நடிகை மமிதா பைஜு அடுத்ததாக ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெய் அனுமன்’ திரைப்படத்தின் மூலம் நேரடியாகத் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். பிரசாந்த் வர்மா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் மமிதா பைஜு தற்போது அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் வரிசையில் சூப்பர் ஹீரோ கதைக்களத்துடன் இப்படம் உருவாகி வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். ரிஷப் ஷெட்டி மற்றும் மமிதா பைஜு இணையும் இப்படம் குறித்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)