கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது மதுபோதையில் வாகன மோதல், மிரட்டல் புகார்.. பரபரப்பு குற்றச்சாட்டு!

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது மதுபோதையில் வாகனத்தை மோதியதுடன், தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக ஹோட்டல் ஊழியர் ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ வீட்டின் அருகே உள்ள ஹோட்டலில் பணிபுரியும் சுரேஷ் என்பவர், தனது வாகனம் சேதமடைந்தது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது அருள் விக்னேஷ் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக தெரிவித்துள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு அவர் எந்தவொரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து எம்.எல்.ஏ வீட்டின் அருகே சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் அவரைச் சூழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் தலையிட்டு, சுரேஷை அவர் பணிபுரியும் இடத்திலிருந்து வெளியேற்றினர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. எம்.எல்.ஏ மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் குறித்த தகவல் வெளியாகவில்லை.




கருத்துகள் (0)