கல்லூரி ஆசிரியை திட்டியதால் மனவேதனை? செங்குன்றம் அருகே நர்சிங் மாணவி தூக்கிட்டு உயிரிழப்பு!

சென்னை செங்குன்றம் அருகே உள்ள அலமாதி எடப்பாளையத்தைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் ஆனந்தகுமாரின் மகள் ஜஸ்வினிஸ்ரீ (18), தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், மாணவிக்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கல்லூரி ஆசிரியை அவரைக் கண்டித்துத் திட்டியதாகவும், இதனால் மாணவி மனவேதனையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, நேற்று இரவு தனது படுக்கையறையில் மாணவி தூக்கிட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)