குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்து உடலை சுடுகாட்டில் எரித்த கணவர் – கடலூரில் அதிர்ச்சி சம்பவம்!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவர் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரவிச்சந்திரன் என்பவர் குடும்பத் தகராறில் தனது மனைவி சிவகாமியைத் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், இந்தச் சம்பவம் யாருக்கும் தெரியாமல் இருக்க மனைவியின் உடலை சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று எரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கிராம உதவியாளர் அளித்த புகாரின் பேரில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். மேலும், உடலை எரிக்க உதவியதாக ரவிச்சந்திரனின் தந்தை மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து, கணவர் மற்றும் அவரது தந்தையின் பங்கு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)