ஞாயிறு, நவம்பர் 01, 2026
உண்மையின் குரல்
அரசியல்

கரூர் சீட் யாருக்கு? காய் நகர்த்தும் தவெக தலைமை.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த உளவுத்துறை அறிக்கை!

கரூர் சீட் யாருக்கு? காய் நகர்த்தும் தவெக தலைமை.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த உளவுத்துறை அறிக்கை!

 

 

கரூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து கட்சித் தலைமையகத்தில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் சிறை சென்ற மதியழகனைத் தவிர்த்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால், கரூர் தொகுதியில் தவெகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம் என உளவுத்துறை அறிக்கை எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கை தொடர்பான தகவல்கள் கட்சித் தலைவர் விஜய்யின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 

இதையடுத்து, தொகுதியின் தற்போதைய அரசியல் சூழல், மக்கள் மனநிலை மற்றும் வேட்பாளர்களுக்கான ஆதரவு குறித்து மூத்த நிர்வாகிகளுடன் தவெக தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும், கரூர் தொகுதியை மீண்டும் மதியழகனுக்கே ஒதுக்கலாமா அல்லது எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

 

இதனால் கரூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இறுதியில் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன என்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.