தவெக ஆட்சியில் ஊழலே இல்லையா? – எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

தவெக ஆட்சியில் ஊழலே இல்லையா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
செங்கல்பட்டில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
அப்போது, "ரூ.200 கோடியை விட்டுவிட்டு ஏன் மக்கள் சேவைக்கு வந்தீர்கள்? தனது சொத்து மதிப்பு ரூ.600 கோடி மட்டுமே என்று கூறியுள்ளார். ஒரு திரைப்படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் என்றால், 70 படங்களுக்கு ரூ.14,000 கோடி வருகிறதே? மற்றவை அனைத்தும் கருப்புப் பணமா? அப்படியிருக்கும்போது உங்களால் எப்படி நல்லாட்சியை வழங்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், தவெகவை விமர்சித்துப் பேசிய அவர், "சனிக்கிழமை சந்தை என்ற தவெக கூடாரம் மூடப்பட்டுவிட்டது" என்றும் கடுமையாகச் சாடினார்.




கருத்துகள் (0)