திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
அரசியல்

மதுபான விலை உயர்வில் காட்டும் அக்கறையை மக்கள் நலனிலும் காட்டுங்கள்! முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

மதுபான விலை உயர்வில் காட்டும் அக்கறையை மக்கள் நலனிலும் காட்டுங்கள்! முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

மதுபான பாட்டில்களுக்கு ரூ.10 வரை விலையை உயர்த்தியதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,600 கோடி கூடுதல் வருவாய் கிடைப்பதாகப் பெருமை பேசும் முதல்வர் விஜய், மக்கள் நலனிலும் உரிய அக்கறை செலுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

 

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவச் செலவைக் குறைக்கும் வகையில், 'அம்மா மருந்தகங்களை' முழுமையாகத் திறந்து செயல்படுத்த அரசு முன்வருமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மாத்திரைகளை மலிவு விலையில் கிடைக்கச் செய்வதோடு, அரசு சுகாதாரத் துறையின் மேம்பாட்டிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.