திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

காதல் தொல்லையால் இளம்பெண் உயிரிழப்பு; இளைஞர் அடித்துக் கொலை – குமரியில் அதிர்ச்சி!

காதல் தொல்லையால் இளம்பெண் உயிரிழப்பு; இளைஞர் அடித்துக் கொலை – குமரியில் அதிர்ச்சி!

 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் காதல் தொடர்பான தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படும் இளம்பெண் ஏஞ்சல் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் ஆண்டனி, கடந்த மே மாதம் ஏஞ்சலின் தந்தை அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த அவர் மீண்டும் தொல்லை கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இதனால் ஆத்திரமடைந்த ஏஞ்சலின் உறவினர்கள், ஆண்டனியைக் கற்களால் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணின் உயிரிழப்புக்கான சூழல், இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் இதில் தொடர்புடையவர்களின் பங்கு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.