திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

சேலத்தில் துணிகரம்: வெள்ளிக் குடோனில் 600 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை!

சேலத்தில் துணிகரம்: வெள்ளிக் குடோனில் 600 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை!

 

 

சேலம் சினிமா நகர் பகுதியில் உள்ள வெள்ளிக் குடோனில் சுமார் 600 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலசுப்ரமணி என்பவருக்குச் சொந்தமான இந்தக் குடோனுக்குள் முகமூடி அணிந்த நான்கு பேர் புகுந்து, அங்கிருந்த காவலாளியைத் தாக்கிவிட்டு வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி. பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் யார், அவர்கள் எப்படித் தப்பிச் சென்றனர், கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளிப் பொருட்களின் மதிப்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.