சனி, நவம்பர் 21, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு.. மத்திய நிபுணர் குழு இன்று நேரில் ஆய்வு!

கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு.. மத்திய நிபுணர் குழு இன்று நேரில் ஆய்வு!

கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில், நோய் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு இன்று நேரில் களமிறங்குகிறது. போபால் மற்றும் புனேவில் இருந்து வந்துள்ள நிபுணர்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

 

குறிப்பாக, கட்டியங்குப்பம் பகுதியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட கோழிப் பண்ணைகளில் இந்தக் குழுவினர் ஆய்வு நடத்த உள்ளனர். அங்கு நோய் பாதிப்பு எந்த அளவில் உள்ளது, மேலும் பரவாமல் தடுக்க அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

 

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பின்பற்றப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் மத்திய குழுவினர் ஆய்வு செய்து தேவையான ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.