வெள்ளி, அக்டோபர் 16, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

 

 

கோவையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். இதற்கு முன்னதாக, அறிவுலகத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையைத் திறந்து வைத்தார். தொடர்ந்து அறிவுலகத்தைத் திறந்து வைத்து, அங்குள்ள வருகைப் பதிவேட்டிலும் கையெழுத்திட்டார்.

 

பின்னர், வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகங்கள், தொழில் வளர்ப்பு மையம், அறிவியல் மையம் உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், அவற்றின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த படைப்புகள் மற்றும் அம்சங்கள் குறித்து மாணவிகள் முதலமைச்சருக்கு விளக்கினர். இந்த நிகழ்வின்போது அறிவுலகத்தின் பல்வேறு பகுதிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.