வெள்ளி, அக்டோபர் 16, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கோவையில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகம் திறப்பு: இன்று முதல்வர் விஜய் பங்கேற்பு!

கோவையில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகம் திறப்பு: இன்று முதல்வர் விஜய் பங்கேற்பு!

 

 

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே, சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையம் இன்று திறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

 

இதையடுத்து, இன்று காலை 11.45 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று பெரியார் சிலை மற்றும் கல்வெட்டைத் திறந்து வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அறிவுலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தைப் பார்வையிடுவதுடன், திறப்பு விழா நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உள்ளார். கோவையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிவியல் மற்றும் நூலக வளாகம் பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.