வெள்ளி, அக்டோபர் 16, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

பெரியார் அறிவுலகத்தில் மாணவருடன் அறிவியல் விளையாட்டு விளையாடிய முதல்வர் விஜய்!

பெரியார் அறிவுலகத்தில் மாணவருடன் அறிவியல் விளையாட்டு விளையாடிய முதல்வர் விஜய்!

 

 

கோவையில் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், அங்குள்ள அறிவியல் சார்ந்த விளையாட்டு வசதிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். திறப்பு விழாவுக்குப் பிறகு வளாகத்தின் முக்கிய அம்சங்களை நேரில் பார்வையிட்ட அவர், அங்குள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

 

தொடர்ந்து, அறிவியல் சிந்தனையைத் தூண்டும் விளையாட்டு இயந்திரத்தில் மாணவர் ஒருவருடன் இணைந்து விளையாடி மகிழ்ந்தார். மேலும், எண்ணியல் சிந்தனையை வளர்க்கும் கருவியில் பொத்தான்களை அழுத்தி விளையாட்டிலும் ஈடுபட்டார். முதலமைச்சர் மாணவருடன் இணைந்து அறிவியல் விளையாட்டில் பங்கேற்ற காட்சிகள் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.