குறு, சிறு விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வரை கடன்! தமிழக அரசின் புதிய திட்டம்!

தமிழ்நாட்டில் குறு, சிறு விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழில்களை மேம்படுத்தும் நோக்கில், 2026–27 நிதியாண்டில் ரூ.5,000 கோடி கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதி பெறும் விவசாயிகள் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மத்திய காலக் கடன் பெறலாம் எனக் கூறப்படுகிறது. கடனுக்கு ஆண்டுக்கு 9% வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெறப்படும் கடனை 36 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், சூழ்நிலையைப் பொறுத்து 3 முதல் 6 மாதங்கள் வரை தவணைச் சலுகை வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடன் பெறுவதற்கான தகுதி, வட்டி மற்றும் தவணை விதிமுறைகளை விண்ணப்பிக்கும் முன் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம்.




கருத்துகள் (0)