சென்னையில் அதிகனமழை: உயிர்ச்சேதம் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

சென்னையில் பெய்த அதிகனமழையால் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மழை தொடர்பாக சமூக வலைதளங்களில் பழைய வீடியோக்களைப் பகிர்ந்து பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போதைய நிலவரத்தை உறுதிப்படுத்தாமல் பழைய காட்சிகளைப் பகிர்வது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், தகவல்களைச் சரிபார்த்துப் பகிர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குழந்தைகளுக்குத் தேவையான பால், முதியவர்களுக்குத் தேவையான மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பொதுமக்கள் போதிய அளவில் வைத்திருக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மழை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றி, தேவையற்ற வதந்திகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)