திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
அரசியல்

தவெக ஆட்சி கவிழும் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிபிஎம் பெ. சண்முகம்!

தவெக ஆட்சி கவிழும் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிபிஎம் பெ. சண்முகம்!

தவெக ஆட்சி கவிழும் என ஸ்டாலின் கூறுவது நடக்காது என்றும், தற்போதைய அரசுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

 

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் தங்களது விருப்பத்தையும் ஆசையையும் வெளிப்படுத்தி வருவதாகக் கூறினார். ஆனால், அவர்கள் எதிர்பார்ப்பதைப் போல தவெக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும், ஆட்சி கவிழும் என்ற கருத்து உண்மையாக வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

 

கடந்த வாரம் தவெக அரசை இடதுசாரி கட்சிகள் விமர்சித்திருந்த நிலையில், அவர்கள் ஆட்சிக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற அரசியல் விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில், பெ. சண்முகத்தின் தற்போதைய கருத்து, தவெக அரசுக்கு இடதுசாரிகளின் ஆதரவு தொடரும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.