செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
இந்தியா

மம்தா பானர்ஜியைத் தாக்க முயற்சியா? கத்தியுடன் வந்த பெண்ணால் பரபரப்பு!

மம்தா பானர்ஜியைத் தாக்க முயற்சியா? கத்தியுடன் வந்த பெண்ணால் பரபரப்பு!

 

 

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, துர்கா பூஜை பந்தலைத் திறந்து வைப்பதற்காக காளிகாட் இல்லத்திலிருந்து புறப்பட்டபோது, கத்தியுடன் வந்த இளம் பெண் ஒருவர் அவரைத் தாக்க முயன்றதாகத் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மம்தாவை “அத்தை” என அழைத்தபடி அருகில் சென்ற அந்தப் பெண், அவரது புடவையைப் பிடித்து இழுத்து ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

 

சம்பவத்தின்போது அந்தப் பெண் போதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருந்ததா என அவரது உதவியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இருப்பினும், சம்பவத்தின் முழு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.