செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
இந்தியா

கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு; தொடரும் மீட்புப் பணி!

கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு; தொடரும் மீட்புப் பணி!

 

 

பீகார் மாநிலம் ரகோபூர் பகுதியில் கங்கை ஆற்றில் பயணித்த படகு திடீரென கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 20 பேர் அந்தப் படகில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகப் படகில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விபத்தைத் தொடர்ந்து ஆற்றில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் குறித்த கூடுதல் விவரங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கப்படுகின்றன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.