மாணவி காதலை ஏற்க மறுத்ததால் 80 அடி செல்போன் டவரில் ஏறிய கல்லூரி மாணவர்!

ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் இளைஞர், நாமக்கல்லைச் சேர்ந்த சக மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி தனது காதலை ஏற்க மறுத்ததால், மனவேதனையில் இருந்த இளைஞர், அவரை சந்திப்பதற்காக நாமக்கல்லில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து, மாணவியின் வீட்டின் அருகே அமைந்திருந்த சுமார் 80 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறிய அவர், அங்கிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர், கோபுரத்தில் இருந்த மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரை பத்திரமாக கீழே இறக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)