ஞாயிறு, நவம்பர் 22, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மதுப்பழக்கத்தால் குடும்பத் தகராறு 42 வயது தொழிலாளி வீட்டில் உயிரிழப்பு!

மதுப்பழக்கத்தால் குடும்பத் தகராறு 42 வயது தொழிலாளி வீட்டில் உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையை தொடர்ந்து, மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவர் வீட்டில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஏரல் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் (42), மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகள் நிலவி வந்துள்ளன.

 

இந்நிலையில், நேற்று (நவ.20) மதியம் அவரது மனைவி கடைக்கு சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த மகேஸ்வரன் உயிரை மாய்த்துக் கொண்டார். மனைவி வீட்டிற்கு திரும்பியபோது சம்பவம் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.