திருச்செந்தூர் அருகே 11ஆம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக் கொலை இளைஞரும் தற்கொலை முயற்சி!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வேதமாணிக்கபுரத்தில் 11ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம் தொடர்பாக மாணவியின் வீட்டிற்கு சென்ற இளைஞர், அவரை கத்தியால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவியை கொலை செய்ததாக கூறப்படும் அந்த இளைஞர், தொடர்ந்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.




கருத்துகள் (0)