ஞாயிறு, நவம்பர் 22, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

அதிமுக பொதுக்கூட்ட மேடையில் பேசியபோது மயங்கி விழுந்த 76 வயது நிர்வாகி உயிரிழப்பு!

அதிமுக பொதுக்கூட்ட மேடையில் பேசியபோது மயங்கி விழுந்த 76 வயது நிர்வாகி உயிரிழப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேசுவரத்தில் நடைபெற்ற அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், கட்சி நிர்வாகி ஒருவர் மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

எமனேசுவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட இலக்கிய அணி செயலாளரும், 76 வயதான எம்.எஸ். திலகர் கலந்து கொண்டு பேசினார். தனது உரையை முடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்த அவர், திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.

 

உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு கட்சி நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்தனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.