திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மேட்டூர் அணையில் நீர் திறப்பு 10,000 கனஅடியாகக் குறைப்பு; விவசாயிகள் கவலை!

மேட்டூர் அணையில் நீர் திறப்பு 10,000 கனஅடியாகக் குறைப்பு; விவசாயிகள் கவலை!

 

 

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு கடந்த சில நாட்களாகப் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

 

இதற்கிடையே, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,000 கனஅடிக்கும் கீழாகச் சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்குமா என்ற கவலை டெல்டா விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. நேற்று (அக்.11) மாலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 63 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ள சூழலில், பாசனத்திற்கான நீர் திறப்பு விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.