திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

 

தமிழகத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று (அக்.12) 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மழை பெய்யக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வானிலை தொடர்பான அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.