முதலமைச்சர் அமைதியாக இருப்பது புதிய திட்டங்களைத் தீட்டுவதற்கே! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

முதலமைச்சர் விஜய் தற்போது அமைதியாக இருப்பது புதிய திட்டங்களை வகுப்பதற்காகத்தான் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 40 கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய்க்கு, அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்யத் தெரியும் என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் தற்போது அதிகாரிகளின் ஆட்சிதான் நடைபெறுகிறது என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலளித்த அவர், இன்னும் ஓராண்டு பொறுத்திருந்து பாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் தற்போதைய அமைதிக்குப் பின்னால் புதிய திட்டங்களும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளும் இருப்பதாக ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)