தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி? முஸ்தபாவின் உதவியாளர் கனிராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை!

தமிழகத்தில் தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக தவெக எம்எல்ஏ முஸ்தபாவின் உதவியாளரான கனிராஜாவிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே, இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் அதிமுக பிரமுகர் மன்னனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் கனிராஜாவும் தற்போது விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
தவெக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடைபெற்றதா, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், அரசியல் பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த விசாரணையின் முடிவில் வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)