“முதலமைச்சர் என்ற முறையில் மரியாதை செலுத்தினேன்” – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

முதலமைச்சர் விஜய்க்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய விவகாரம் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சருக்கு சால்வை அணிவித்ததை அரசியல் ரீதியாகப் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நயினார் நாகேந்திரன், “முதலமைச்சர் என்ற முறையில் அவருக்கு நான் மரியாதை செலுத்தினேன். அதைத் தயவுசெய்து யாரும் கொச்சைப்படுத்தாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார். அரசியல் கருத்து வேறுபாடுகளைக் கடந்து, முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருப்பவருக்கு மரியாதை அளித்ததாக அவர் கூறியுள்ள இந்த விளக்கம் தற்போது கவனம் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)