நடுவானில் விமானத்தில் ரகளை செய்ததாக ஹாலிவுட் நடிகை செல்மா பிளேயர் கைது – ரூ.19 லட்சம் ஜாமீன் விதிக்கப்பட்டதாக தகவல்!

அமெரிக்காவில் விமானப் பயணத்தின்போது பிரபல ஹாலிவுட் நடிகை செல்மா பிளேயர் கட்டுப்பாடற்ற முறையில் நடந்துகொண்டதாகவும், விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது நடிகை செல்மா பிளேயர் திடீரென ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அவரைக் கட்டுப்படுத்த முயன்ற இரண்டு விமானப் பணிப்பெண்களையும் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கிருந்த பெண் காவலர் மற்றும் செவிலியர்களையும் அவர் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல்துறையினர் அவரைக் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், செல்மா பிளேயரின் தரப்பில் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நரம்பியல் நோய்க்காக எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்தை அவர் தவறவிட்டதே எதிர்பாராத இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என அவரது தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.19 லட்சம் ஜாமீன் தொகை நிர்ணயிக்கப்பட்டதாகவும், வழக்கு விசாரணையை நீதிமன்றம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், நடிகையின் கைது, தாக்குதல் குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான இந்தத் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் தேவைப்படுகிறது.




கருத்துகள் (0)