தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி; குழந்தை உட்பட 3 பேர் காயம்!

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பிரமுகர் ஒருவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும், ஒரு குழந்தை உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் காவல்துறையிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)