நீதித்துறைத் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண் குறைப்பு: தமிழக அரசு அரசாணை!

தமிழக நீதித்துறைப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், மாவட்ட நீதிபதி மற்றும் உரிமையியல் நீதிபதி நேரடி நியமனத் தேர்வுகளுக்கான தகுதி மதிப்பெண்களைக் குறைத்து தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் நீதித்துறைப் பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகாலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இந்த நடவடிக்கை தீர்வாக அமையும் என்றும் கூறப்படுகிறது.




கருத்துகள் (0)