சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
இந்தியா

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும்: ராகுல் காந்தி!

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும்: ராகுல் காந்தி!

பாஜக அரசு மற்றும் RSS அமைப்பிற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசின் நடவடிக்கைகள் காழ்ப்புணர்ச்சி கொண்டவை என குற்றம் சாட்டிய அவர், தலைவர்களையும் இளைஞர்களையும் கைது செய்தாலும் தங்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என கூறியுள்ளார். மேலும், இந்திய அரசியலமைப்பையும் மக்களின் குரலையும் காக்க இளைஞர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.