தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம்: விமானத்தில் கைது செய்யப்பட்ட 3 பேர் விடுதலை!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, அக்டோபர் 10ஆம் தேதி டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த CJP அமைப்பைச் சேர்ந்த அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகிய மூன்று தலைவர்களும் விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மூவரையும் டெல்லி போலீசார் தற்போது விடுதலை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பான எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் நடைபெற்ற இந்தப் போராட்டம் அரசியல் மற்றும் பொதுவெளியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், போராட்டம் தொடர்பாக அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.




கருத்துகள் (0)