பாஜகவை எதிர்ப்பதில் தவெக தயக்கம் காட்டுகிறதா? காங்கிரஸ் நிர்வாகிகள் கேள்வி!

பாஜக விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தமான எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்கு எதிராகத் தொடக்கம் முதலே குரல் கொடுத்து வருவதாகக் கூறும் தவெக, தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாகத் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என அவர்கள் விமர்சித்துள்ளனர்.
பாஜகவை எதிர்ப்பதில் தவெக உறுதியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். முக்கியமான விவகாரங்களில் தெளிவான முடிவை அறிவிக்காமல் தவெக மௌனம் காப்பது, அதன் அரசியல் நிலைப்பாடு குறித்த விவாதத்தை அதிகரித்துள்ளதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




கருத்துகள் (0)