“பணம் கொடுக்காமல் வென்ற தவெக!” – அன்புமணி ராமதாஸ் கருத்து!..

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்கள் பணப் பட்டுவாடா இன்றி ஜனநாயக முறைப்படி நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தேர்தலின்போது வாக்காளர்களைக் கவர்வதற்காகப் பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம் மற்றும் உணவு உள்ளிட்டவை வழங்கப்படும் நடைமுறைகள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால், இதுபோன்ற எந்தவிதமான விநியோகங்களும் இல்லாமலேயே இந்த இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறினார். அவரது இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)