பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்.. 13 குழந்தைகளை தீ வைத்து எரிக்க மிரட்டல்! அதிரடியாக மீட்ட பாதுகாப்புப் படையினர்!

பிரேசிலின் பரானா மாகாணத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் புகுந்த மர்ம நபர் ஒருவர், 13 குழந்தைகளை ஓர் அறைக்குள் அடைத்து வைத்து பெட்ரோல் ஊற்றித் தீ வைப்பதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, குழந்தைகளைப் பாதுகாப்பாக மீட்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தபோதும், அவர் அதற்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளிக்குள் அதிரடியாக நுழைந்த பாதுகாப்புப் படையினர், அந்த நபரைச் சுட்டுக் கொன்றனர். பின்னர், அறைக்குள் சிக்கியிருந்த 13 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட நபர் யார் என்பது குறித்த விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

கருத்துகள் (0)