ஞாயிறு, அக்டோபர் 11, 2026
உண்மையின் குரல்
உலகம்

ஜிபூட்டி அருகே அகதிகள் படகு கவிழ்ந்து கோர விபத்து: 109 பேர் பலி; 116 பேர் மாயம்!

ஜிபூட்டி அருகே அகதிகள் படகு கவிழ்ந்து கோர விபத்து: 109 பேர் பலி; 116 பேர் மாயம்!

 

 

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் இருந்து ஏமன் நோக்கி 200-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, குஹேரே பகுதி அருகே கடலில் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. இந்தத் துயரச் சம்பவத்தில் 15 குழந்தைகள் உட்பட 109 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும், 116-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனர். விபத்தில் சிக்கிய எத்தியோப்பியாவைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடலில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.