பெரம்பலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு: சொத்துப் பிரச்சினையால் சோக சம்பவம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை சொத்தைப் பிரித்துக் கொடுக்காதது தொடர்பாகக் குடும்பத்தில் பிரச்சினை நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், மகன், மருமகள், பேரன், பேத்தி என நான்கு பேர் விஷம் அருந்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தின் பின்னணி மற்றும் குடும்பப் பிரச்சினை குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)