தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி! ரூ.8.45 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துவதற்கு நிரந்தர அனுமதி வழங்கி அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.8 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதித்துறையின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2022–2023ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களின் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இந்த முயற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)