பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் ஊழல் குற்றச்சாட்டு: திமுகவைச் சாடிய தவெக ஐடி விங்!

கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்திற்கான நூல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இந்த விவகாரத்தை முன்வைத்து தவெக ஐடி விங் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், “அழுகிப்போன வெங்காயத்தை அவதூறாக உரித்த திமுகவின் முகமூடியை, தீயசக்தி திமுக அரசால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் பெருமாள் முருகன் தாறுமாறாக உரித்து உப்புக்கண்டம் போட்டு உள்ளார். திமுக இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? பெரியார் சொன்ன வெங்காயம் இந்த ஊழல் திமுகதான் என்பதை ஒப்புக்கொள்ளப் போகிறதா, இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
நூல் கொள்முதல் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும், அதைத் தொடர்ந்து தவெக தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரத்தில் திமுக தரப்பின் விளக்கமும், நூல் கொள்முதல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களுடன் அளிக்கப்படும் பதிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.




கருத்துகள் (0)