ஞாயிறு, அக்டோபர் 18, 2026
உண்மையின் குரல்
இந்தியா

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 9 வயது சிறுவன் உயிரிழப்பு – 39 மணி நேர மீட்புப் போராட்டம் சோகத்தில் முடிந்தது!

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 9 வயது சிறுவன் உயிரிழப்பு – 39 மணி நேர மீட்புப் போராட்டம் சோகத்தில் முடிந்தது!

 

ராஜஸ்தான் மாநிலம் பாலோடி மாவட்டத்தில் 1,050 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலோடி மாவட்டத்தைச் சேர்ந்த போமரம் என்ற 9 வயது சிறுவன், தனது வீட்டின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்துள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சிறுவனை உயிருடன் மீட்பதற்காக மீட்புக் குழுவினர் சுமார் 39 மணி நேரம் இடைவிடாமல் போராடினர். நீண்ட நேர மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு சிறுவனை வெளியே கொண்டு வந்த அதிகாரிகள், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனையில் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சுமார் 39 மணி நேரம் நீடித்த மீட்புப் போராட்டம் இறுதியில் சோகத்தில் முடிந்தது.

சிறுவன் உயிருடன் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையில் இருந்த குடும்பத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இந்தச் செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனின் உயிரிழப்பு அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.