கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசல்: 19 பேர் உயிரிழப்பு; குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மழை காரணமாக வெளியே காத்திருந்த பக்தர்கள் ஒரே நேரத்தில் பந்தலுக்குள் செல்ல முயன்றபோது இந்த நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)