ஞாயிறு, அக்டோபர் 18, 2026
உண்மையின் குரல்
இந்தியா

கேரளாவில் மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் கணவர் கொலை – தாய் கைது!

கேரளாவில் மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் கணவர் கொலை – தாய் கைது!

 

கேரள மாநிலம் கொச்சி ஏலமக்காரா பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் மர்ம மரணமாகக் கருதப்பட்ட இந்தச் சம்பவம், போலீசார் நடத்திய விசாரணையில் கொலை வழக்காக மாறியுள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், 32 வயது இளைஞரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டு தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த இளைஞர் அப்பெண்ணின் மூத்த மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தாய்க்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து குடும்பத்தில் கடுமையான பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், மதுபோதையில் இருந்த தனது இரண்டாவது கணவரைத் தாக்கிக் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கொலையை மறைக்கும் நோக்கில் கணவரின் உடலை ரயில் தண்டவாளத்தில் வீசியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் தனது இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு சொந்த மாநிலமான ஒடிசாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது, போலீசார் அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல் தொடர்பான விசாரணையில் குடும்பத்திற்குள் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமையும் கொலைச் சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.