ரேஷன் கடை ஊழியர்களுக்கு நவம்பர் 9-ம் தேதி விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9-ம் தேதியை விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அதற்கு மறுநாளான திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலாக, ஏற்கனவே விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்த 2026 நவம்பர் 21-ம் தேதி, ரேஷன் கடை பணியாளர்களுக்குப் பணி நாளாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.




கருத்துகள் (0)